Sunday, June 21
Shadow

Tag: #rksuresh

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’!

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’!

Latest News, Top Highlights
ரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’ (Tamilnadu Defender & Escorts Association) என்ற புதிய சங்கத்தை இன்று (மே 19) தொடங்கி வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பவுன்சர்ஸ் என்று சொல்லக்கூடிய பாதுகாவலர்களுக்கான புதிய சங்கமாக உருவாகியுள்ள இந்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ்’ சங்கத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த புதிய சங்கத்தை பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார். இன்று ஆர்.கே.சுரேஷின் பிறந்தநாள் என்பதால், ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’-ன் நிறுவனர் மற்றும் தலைவர் மொகமத் உமர், செயலாளர் சலீம், பொருளாளர் ஆனந்த், துணை தலைவர் சங்கீதா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உ...
தல பிறந்தநாளில் செம ட்ரீட் காத்திருக்கு!

தல பிறந்தநாளில் செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார். அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும். அப்படி இருக்கும்போது அஜித்தின் பிறந்தநாள் என்றால் சும்மாவா. உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அஜித் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு 2 மாதத்திற்கு முன்பே அஜித் பிறந்தநாளை டிரெண்டாக்கினர். அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அஜித் பிறந்தநாளில் மாஸான ட்ரீட் ஒன்று கொடுக்க இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகிற...
நான் ஏமாற்றி விட்டேனா? பொய்ப் புகாருக்குத்  தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!

நான் ஏமாற்றி விட்டேனா? பொய்ப் புகாருக்குத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!

Latest News, Top Highlights
'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பின் ஆர்.கே. சுரேஷ் தன் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் பிரமாண்டப் படமாக உருவாகவுள்ள 'புலிப்பாண்டி 'படத்தில் நடிக்கவுள்ளார். பிற நடிகர்கள் படக் குழு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். அவரிடம் அவரைப் பற்றி வந்துள்ள செய்தி பற்றிக் கேட்டோம். தன்னைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் பற்றித்தானே என்று பேச ஆரம்பித்தார். " கோடை மழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது கவனிக்கப்படவில்லை.. மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் முயன்று தியேட்டர்கள் பிடித்து வெளியிட உதவினோம். படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை. இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி பணமும் ஐந்து லட்ச ரூப...
நெப்போலியன் படத்தின் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ்

நெப்போலியன் படத்தின் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ்

Latest News, Top Highlights
தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராகவும் வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக `பில்லா பாண்டி' படம் உருவாகி உள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர வேட்டைநாய், தனிமுகம், முகம், வர்கம் உள்ளிட்ட படங்களிலும் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். விக்ரமின் ஸ்கெட்ச், விஜய் ஆண்டனியின் காளி படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் டிராபிக் ராமசாமி, ஷைக்கரி சாம்பு, கரும்புள்ளி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றியிருக்கிறார். தனதுன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான 'தர்மதுரை'க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த ஆர்.கே.சுரேஷுக்கு ‘நெப்போலியன்’ படத்தின் கதை மிகவும...
ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் பள்ளிப் பருவத்திலே

ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் பள்ளிப் பருவத்திலே

Latest News
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு 'பள்ளிப்பருவத்திலே' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா, கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தா...
பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது தீர்த்து வைத்த விஷால் – செல்வமணி

பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது தீர்த்து வைத்த விஷால் – செல்வமணி

Latest News
பில்லா பாண்டி ' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில்உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைத்த விஷால் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதிவேக நாயகனாக வளர்ந்துவரும் ஆர். கே.சுரேஷ் நடித்து வரும் படம் 'பில்லா பாண்டி '. 'தர்மதுரை'க்குப் பிறகு ஸ்டுடியோ 9 தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் ஒரு அஜீத் ரசிகராக வருகிறார். இதன் படப் பிடிப்பு மதுரைப் பகுதிகளில் தொடங்கி நடை பெற்று வந்தது. ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற வாடிவாசல் அமைந்துள்ள அலங்காநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது . சரவண சக்தி இயக்கிக் கொண்டிருந்தார் . ஜீவன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். ஆர்.கே சுரேஷ் , இந்துஜா, சாந்தினி , யோகிபாபு, நமோ நாராயணா , இயக்குநர் மாரிமுத்து ஆகியோர் நடித்துக் க...