ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!
நடிகை ரோகிணி இயக்குநராக களமிறங்கிய படம் "அப்பாவின் மீசை" . இயக்குநர் சேரன் தயாரித்த இந்தப் படத்தில் தென்னகத்தின் முக்கிய நடிகர்களான நாசர்,பசுபதி,சேரன், சலீம் குமார் ஆகியோரும் பிரபல முன்னணி நடிகை நித்யா மேனனும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் சேரன் தனது தாமினி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அவரின் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தப் படத்திற்குப் பல்வேறு பைனான்சியர்களும் கோர்ட்டில் தடை வாங்கியிருந்தனர். இந்நிலையில் முழுவதுமாக எடுக்கப்பட்டுவிட்ட இந்தப்படத்தின் பிற தயாரிப்புப் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதை இயக்கி உள்ள நடிகை ரோகிணியே படத்தை வெளியிட தீர்மானித்து, அதற்குத் தேவையான பணத்தை 'க்ரௌட் ஃபண்டிங்' மூலம் திரட்ட உள்ளார். விஸ்பெர்ரி என்கிற இணையதளத்தின் மூலம் தொடங்கியுள்ள நடிகை ரோகிணி...
