Wednesday, June 24
Shadow

வாலிபால் களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’… படப்பிடிப்பு உற்சாகமாக தொடக்கம்!

வாலிபால் களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’… படப்பிடிப்பு உற்சாகமாக தொடக்கம்!

சென்னை:

தமிழ் திரையுலகில் இளம் தலைமுறை நடிகர்களை முன்னிறுத்தும் புதிய படைப்பாக உருவாகி வரும் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை அருகே உற்சாகமான சூழலில் தொடங்கியது.

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாகவும், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் தாமோ நாகபூஷணம். இவர், இயக்குநர் பா. இரஞ்சித் அணியில் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் படத்தின் பூஜை விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு பணிகளும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜுடன் இணைந்து இயக்குநர் பா. இரஞ்சித் கிளாப் அடித்து முதல் காட்சியை துவக்கி வைத்தார்.

மேலும், பவிஷ் மற்றும் நடிகர் மைம் கோபி இணைந்து நடித்த முதல் காட்சிக்கு தனது முன்னாள் உதவி இயக்குநருக்காக பா. இரஞ்சித் நேரடியாக ‘ஆக்ஷன்’ கூறி வாழ்த்து தெரிவித்தது நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், வாலிபால் விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘அட்டாக்கர்’, இளைஞர்களின் கனவுகள், போராட்டங்கள் மற்றும் வெற்றிப் பயணத்தை திரையில் சுவாரஸ்யமாக பதிவு செய்யவுள்ளது என படக்குழு தெரிவிக்கிறது.

படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்புகள் சென்னை உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், விரைவில் படத்தின் மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

விளையாட்டு, இளமைத் துடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களம் ஆகியவற்றின் கலவையாக உருவாகும் ‘அட்டாக்கர்’, தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க புதிய முயற்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Volleyball-Based Film “Attacker” Begins Shooting with Enthusiastic Start

Chennai:

The shooting of “Attacker,” an upcoming Tamil film that aims to spotlight a new generation of talent, commenced today near Chennai amid much enthusiasm and excitement.

Produced by Dinesh Raj under the banner of Jinima Entertainment Pvt. Ltd., the film stars Pavish, nephew of actor Dhanush, in the lead role, alongside Avantika, daughter of actress Khushbu, as the female lead.

The film marks the directorial debut of Thamo Nagabooshanam, who previously worked as an associate director with acclaimed filmmaker Pa. Ranjith.

Following the recent pooja ceremony, the production has now officially moved into its shooting phase. Director Pa. Ranjith, along with producer Dinesh Raj, inaugurated the first day of filming by giving the ceremonial clap for the opening shot.

Adding a special touch to the occasion, Pa. Ranjith personally called “Action” for the film’s first scene featuring Pavish and actor Mime Gopi, extending his support and encouragement to his former associate director on his directorial journey.

Sports-based films have consistently enjoyed a strong connection with audiences, and “Attacker” is set against the backdrop of volleyball, promising an engaging narrative that explores the dreams, struggles, determination, and triumphs of young athletes.

The film’s principal photography will continue across Chennai and several locations in South India. The makers have also revealed that announcements regarding the rest of the cast and technical crew will be made in the coming days.

Combining the energy of sports, youthful aspirations, and an emotionally driven storyline, “Attacker” is already generating interest as one of the noteworthy upcoming projects in Tamil cinema.