ரம் – திரைவிமர்சனம் (செம கிக்) Rank 3/5
இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு நல்ல வாரம் என்று தான் சொல்லணும் ஏழு படங்கள் ரிலீஸ் நல்ல விஷயம் தானே அதில் பல புதுமுக இயக்குனர்கள் பல புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளனர் என்று சொல்லணும்.
தமிழ் சினிமாவில் நாம் பல சீசன்கள் கடந்து வந்து இருக்கிறோம் ஆனால் இந்த பேய் சீசன் மட்டும் போய்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் ஆமாம் இந்த வாரமும் "ரம்" என்ற ஒரு பேய் திரில்லர் படம் படத்தின் பெயரிலே ஒரு கிக் இருக்கிறது படம் எப்படி இருக்கும் என்று கேட்டல் அதிலும் நல்ல கிக் இருக்கிறது என்று தான் சொல்லணும். இளம் இயக்குனர் முதல் படம் முதல் முயற்சி நல்ல முயற்சி பாராட்டனும்.
ரம் இந்த படத்தில் வேலை இல்லாபட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த ஹ்ரிஷ்கேஷ் தான் ஹீரோ நாயகியாக சஞ்சிதாசெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விவேக்,நரேன்,மியா ஜார்ஜ்,அம்ஜத் அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் வாசு...
