
இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு நல்ல வாரம் என்று தான் சொல்லணும் ஏழு படங்கள் ரிலீஸ் நல்ல விஷயம் தானே அதில் பல புதுமுக இயக்குனர்கள் பல புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளனர் என்று சொல்லணும்.
தமிழ் சினிமாவில் நாம் பல சீசன்கள் கடந்து வந்து இருக்கிறோம் ஆனால் இந்த பேய் சீசன் மட்டும் போய்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் ஆமாம் இந்த வாரமும் “ரம்” என்ற ஒரு பேய் திரில்லர் படம் படத்தின் பெயரிலே ஒரு கிக் இருக்கிறது படம் எப்படி இருக்கும் என்று கேட்டல் அதிலும் நல்ல கிக் இருக்கிறது என்று தான் சொல்லணும். இளம் இயக்குனர் முதல் படம் முதல் முயற்சி நல்ல முயற்சி பாராட்டனும்.
ரம் இந்த படத்தில் வேலை இல்லாபட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த ஹ்ரிஷ்கேஷ் தான் ஹீரோ நாயகியாக சஞ்சிதாசெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விவேக்,நரேன்,மியா ஜார்ஜ்,அம்ஜத் அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் அனிருத் இசையில் அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில் விஜயராகேவேந்திரா தயாரிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ரம்
நாயகன் ஹ்ரிஷ்கேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர்.
சிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
அதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.
அப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.
இறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார்? அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன? நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஹ்ரிஷ்கேஷ் வேலையில்ல பட்டதாரி படத்தில் தம்பியாக நடித்தவர் தான் அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் அனிருத் தம்பியும் முதல் பட நாயகன் வாய்ப்பு கிடைத்த வாய்ப்பை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார் என்று தான் சொல்லணும்.
சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது.
நரேன் ஒரு சின்ன இடைவெளிக்கு பின்மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.
படத்தில் மேலும் அம்ஜத் இந்த படத்தில் ஒரு நல்ல வில்லன் நடிகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். அதே போல் ஊமையாக வரும் அர்ஜுன் மிக சிறந்த நடிப்பை வெளிகொணர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது. Rank 3/5
