“மணல் கயிறு” திரைவிமர்சனம் சிரிப்பு வெடி Rank 5/4 (சிந்திக்க சிரிக்க )
1982-ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் "மணல் கயிறு'. தற்பொது இதையே இன்றைய காலத்துக்கு ஏற்ற விதத்தில் மாடர்னாக மாற்றி 34 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள்.
இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியை மிகவும் அழகாக முதல் பாகத்தின் முக்கிய கட்சிகளை கோர்வையாக்கி அதனுடன் இரண்டாம் பாகம் தொடர்கிறது இந்த முயற்சியே நம் மனதை இந்த படம் ரசிக்க வைக்கிறது. இதற்காக சேகர் அவர்களை பாராட்டனும் . அன்று நகைசுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம் ஆனால் இன்று இன்றைய பெண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படம் என்று தான் சொல்லணும் .
இந்தா பாருங்கோண்ணா இந்த லோகத்துல இளம் பெண்கள் திருமணம் குறித்து பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்கின்றனர். ஆனால் அவர்களின் மண வாழ்க்கை அவர்கள் நினைத்தபடி நடக்கிறதா என்றால அதற்கு பலரிடம் விடை கிடைக்காது. இந்த விடையைதான் எஸ்.வி.சேகர் மற்றும் விசுவின...
