என்ஜிகே படம் மூலம் தமிழில் சாதிப்பாரா சாய் பல்லவி
சாய் பல்லவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது மாரி2 ரவுடி பேபி பாடல் தான் ஆனாலும் இவருக்கு எந்த ஒரு வித மாற்றமும் இல்லை இருந்தும் இன்று குழந்தைகள் முதல் அனைவரும் கவரும் நடிகையாக இருக்கிறார்.
மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் மூலம் குட்டீஸ்களுக்கும் அதிகம் தெரிந்த முகமாகிவிட்டார் சாய் பல்லவி. சாய் பல்லவி நடனமாடும் அந்தப் பாடலைப் பார்க்கும் குட்டி பேபிக்கள் கூடவே ஆடுகிறார்கள். அந்தப் புகழை அப்படியே 'என்ஜிகே' படத்தில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சாய் பல்லவி ஆசைப்படுகிறாராம்.
ஆனால், தமிழில் அவர் அறிமுகமான 'தியா' படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 'மாரி 2' படத்திலும் முதலில் காதலியாக நடித்து பின்னர் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்துவிட்டார். மாரி...