
விக்ரமுக்கு நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம்
'வாலு' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய் சந்தர். மீண்டும் சிம்புவை நாயகனாக வைத்து 'டெம்பர்' ரீமேக்கை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படத்தின் ரீமேக் பேச்சுவார்த்தை தடை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களை சந்தித்து கதை கூறி வந்தார் விஜய் சந்தர். அவர் கூறிய கதை பிடித்துவிடவே, விக்ரம் உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற இருக்கிறது.
இப்படத்தின் நாயகிக்கு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குநர் விஜய் சந்தர். தற்போது நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கவிரு...