
சிரஞ்சீவியின் சைரா’ தெலுங்கு படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி
தெலுங்குத் திரையுலகத்தின் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் படம் 'சை ரா நரசிம்ம ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அங்கு ஒரு மாதம் எடுக்கிறார்கள். படத்தில் வெறும் பத்து நிமிடமே வரும் அந்தக் காட்சிக்காக சுமார் 50 கோடி வரை செலவு செய்கிறார்கள்.
இப்படத்தை தமிழ் மொழியிலும் நேரடியாக எடுப்பதாகச் சொல்கிறார்கள். அதற்காகவே தமிழிலிருந்து விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்கள்.
இப்படத்தில் 'சை ரா'வின் துணையாக இருக்கும் 'ஒபாயா' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை நான்கு அலெக்சா கேமராக்கள் மற்...