சினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை” ; சனம் ஷெட்டி..!
தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.
'பர்மா' படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.. சாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.
.
சனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள 'டிக்கெட்' என்கிற ஃபேண்டஸி படம் தற்போது ரிலீசுக்கு தயாரா...