
‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ வெற்றி விழாவில் வாசிங் மெஷின் காமெடி எனக்கு பதற்றமாக இருந்துது- சூரி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக வந்து படத்தை ரசித்து வருகிறார்கள். படம் ரிலீஸுக்கு முன்பே தமிழ்நாடு முழுக்க சுற்றி படத்தை விளம்பரப்படுத்தினர் நாயகன் ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர். படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்து ரசித்து, அவர்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இந்நிலையில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது.
இயக்குனர்கள் கமல்ஹாசன் பிரியதர்ஷனிடம் தொழில் கற்று இந்த படத்தின் மூலம் இயக்குனர...