
மாநகரம் – திரைவிமர்சனம் (வாழவைக்கும் ) இந்த ஆண்டின் சிறப்பு Rank 4.5/5
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள் உண்மை அதே போல இப்ப சினிமாவை வாழவைப்பது குறும்பட இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் மிக சிறந்த கதை களம் தொழில் நுட்பம் இவை அனைத்தும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருகிறார்கள். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இவர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக இருக்கவில்லை அவர்களாக கம்ப்யூட்டரரில் படித்து பல நுணுக்கங்களையும் இவர்களின் கற்பனையும் கலந்து சிறப்பான படங்களை கொடுகிறார்கள் . அப்படி ஒரு இயக்குனர்தான் மாநகரம் படத்தின் இயக்குனரும் யாரிடமும் உதவி இயக்குனாராக பணியபுரியவில்லை அவரா ஒரு குறும்படத்தை இயக்கி அதை வைத்து இந்த பட வாய்ப்பை பெற்று இருக்கிறார். சரி இவரின் இயக்கம் காட்சியமைப்பு கதை படம் எப்படியுள்ளது என்பதை ஆராய்வோம்.
மாநகரம் இந்த படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் ரெஜினா, சார்லி, ராமதாஸ், மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்யின் ...