Wednesday, February 8
Shadow

மாநகரம் – திரைவிமர்சனம் (வாழவைக்கும் ) இந்த ஆண்டின் சிறப்பு Rank 4.5/5

வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள் உண்மை அதே போல இப்ப சினிமாவை வாழவைப்பது குறும்பட இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் மிக சிறந்த கதை களம் தொழில் நுட்பம் இவை அனைத்தும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருகிறார்கள். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இவர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக இருக்கவில்லை அவர்களாக கம்ப்யூட்டரரில் படித்து பல நுணுக்கங்களையும் இவர்களின் கற்பனையும் கலந்து சிறப்பான படங்களை கொடுகிறார்கள் . அப்படி ஒரு இயக்குனர்தான் மாநகரம் படத்தின் இயக்குனரும் யாரிடமும் உதவி இயக்குனாராக பணியபுரியவில்லை அவரா ஒரு குறும்படத்தை இயக்கி அதை வைத்து இந்த பட வாய்ப்பை பெற்று இருக்கிறார். சரி இவரின் இயக்கம் காட்சியமைப்பு கதை படம் எப்படியுள்ளது என்பதை ஆராய்வோம்.

மாநகரம் இந்த படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் ரெஜினா, சார்லி, ராமதாஸ், மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்யின் அற்புதமான இசையில் எஸ் கே. செல்வகுமார் ஒளிப்பதிவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் மாநகரம் இந்த படத்தை ப்ரோடன்ஷால் நிறுவனம் சார்பாக S.ர்.பிரபு தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் இந்த நிறுவனம் ஏற்கனவே நயன்தாரா மாயா படத்தை தயாரித்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ்… இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மாநகரம். சந்தீப் கிஷன் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, எந்த வேலைக்கும் போகாமல் நாயகி ரெஜினாவையே பின்தொடர்ந்து வருகிறார். ஐடி கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கும் ரெஜினாவுக்கு, சந்தீப் மீது பிரியம் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார். சந்திப் கிஷன் ‘சத்யா’ படத்தில் கமல் கதாபாத்திரத்தை போன்று மிகவும் துணிச்சலானவர். எந்த விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால் அதை தில்லாக செய்யக்கூடியவர்.

இவர்களுடைய கதை இப்படியாக பயணித்துக் கொண்டிருக்கும், ரொம்பவும் நேர்மையான ஸ்ரீ, திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார். ரெஜினாவின் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு செல்லும், அவருக்கு அங்கேயே வேலையும் கிடைத்து விடுகிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஸ்ரீ, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டி முடிந்து வெளிவரும்போது, ரவுடிகளிடம் ஏற்பட்ட கைகலப்பில், ஸ்ரீ தன்னுடைய ஒரிஜினல் சர்டிபிகேட் எல்லாவற்றையும் இழக்கிறார். இதை கண்டுபிடித்து திரும்பி அந்த வேலைக்கு சேர்வதா? அல்லது வெறும் கையுடன் ஊருக்கு திரும்புவதா? என்ற குழப்பத்தோடு சென்னையிலேயே சுற்றி வருகிறார்.

இன்னொரு பக்கம், சார்லி தனது 8 வயது பையனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்க்கிறார். சென்னையிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனிடம் வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். அதிலேயே தனது மகனின் வைத்திய செலவையும் ஈடுகட்டும் முயற்சியில் இருக்கிறார்.

மற்றொரு பக்கம் ரொம்பவும் அப்பாவியான ராம்தாஸ், பணம் சம்பாதிப்பதற்காக ரவுடி கும்பலிடம் சேர்கிறார். அவர் மிகவும் திறமைசாலி என்று ஒருவரின் அறிமுகத்தோடு ரவுடிகளிடம் வேலைக்கு சேர்கிறார். இவரை வைத்து ஒரு பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தையை கடத்திவர சொல்கிறார்கள். இவர் கடத்தி வரச்செல்லும் பையனின் பெயரில் நிறைய பேர் அந்த பள்ளியில் இருப்பதால், இவர் கடத்திவரும் பையனுக்கு பதிலாக மதுசூதனன் பையனை கடத்தி வந்துவிடுகிறார்.

இந்த பையனை கடத்திய சம்பவத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ் என நான்கு பேருமே பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்ஹின் ஹீரோ என்று சொன்னால் அது இந்த படத்தின் திரைகதை பின்னணி இசை ஒலிப்பதுவு தான் அடுத்து இயக்கம் இவை தான் முதலில் சொல்ல தோன்ற தோணுது மிக சிறந்த கூட்டணி இவர்கள் கூட்டணி தொடர்ந்து தொடரனும் என்பது இந்த படத்தை பார்க்கும் எல்லா ரசிகனுக்கும் இருக்கும் அவ்வளவு சிறப்பாக பணிபுரிந்து இந்த படத்தின் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளனர். வாழ்த்துகள்

இரண்டு நாயகன் முதலில் ஸ்ரீ ஏற்கனவே ஓநாயும் ஆட்டு குட்டியும் படத்தில் நாம் பார்த்தவர் ஏற்கனவே அந்த படத்திலே சிறந்த நடிகர் என்று நம்மை பேசவைத்தவர் இதுவரை வித்தயாசமான படங்களை கொடுத்த ஸ்ரீ இந்த படம் மூலம் அதை நிருபித்துள்ளார். தன்னுடைய கதாபாத்திரத்தை எந்த இடத்திலும் மிகைபடுத்தாமல் மிக சிறப்பாக நடித்துள்ளார். ஒரு ஐடி பைனாக மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.

படத்தி நாயகனாக சந்தீப் கிஷன் இவர் ஏற்கனவே ஒரு தமிழ் படம் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்.மிகவும் துணிச்சல் மிக்க கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் முரட்டு பையனாகவும் தன் தோற்றத்திலேவெளிபடுத்தியுள்ளார். சண்டைகாட்சிகளில் மிகவும் சிறப்பாக செய்துள்ளார். காதல் காட்சிகளிலும் ரொம்ப வழியாமல் தன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் அளவுக்கு மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

மிகவும் சீரியஸ்ஸான கதைக்களமாக நகரும் நேரத்தில அப்ப அப்ப நமை மிகவும் ரசிக்கும் அளவுக்கு நம்மை சிரிக்க வைக்கிறார் ராமதாஸ் அதே சமயத்தில் இடையூறும் இல்லாமல் இருப்பது சிறப்பு. இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கலகலப்பாகிவிடுகிறார்கள். தனி ஒரு ஆளாக இப்படத்தின் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

ஐடி கம்பெனியில் பணிபுரிபவராக வரும ரெஜினா, தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை ரொம்பவும் எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சார்லியும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

எப்பவும் போல சார்லி மிகவும் உணர்வுபூர்வமாக கால் டாக்ஸி ட்ரைவராக நடித்துள்ளார் சார்லி சென்னை விலாசம் தெரியாமல் தவிக்கும் இடத்தில கொஞ்சம் நகைசுவையை தெளித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை சொல்ல முடியாது ஆனால் இந்த படத்தின் திரைகதை மூலம் நம்மை சுமார் இரண்டு மணி நேரம் நம்மை அரங்கத்தைவிட்டு எங்கும் செல்ல முடியாதலலவுக்கு மிகவும் டிரிக்கியாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை அமைத்து, அழகான திரைக்கதையில் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இரண்டே நாட்கள் நடக்கிற கதைதான். படத்தில் எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி சென்றிருக்கிறார்.

ஒரு வெற்றி படத்துக்கு என்ன என்ன தேவையே அவை அனைத்தும் மிக சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். படத்தில் காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாவற்றையும் சமமாக வைத்து, சமார்த்தியமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக, ராம்தாஸ் கதாபாத்திரத்தை விறுவிறுப்பிற்கு நடுவிலும், நகைச்சுவையுடன் கொண்டு போயிருப்பது படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது. முதல் படத்திலேயே தனது அழகான திரைக்கதையால் ரசிகர்களிடம் பாராட்டு பெறுகிறார்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்களை சுற்றி நகரும் நிகழ்வுகளை படமாக்கியிருந்தாலும், எங்கேயும் குழப்பம் வராமல், படம் பார்க்கும் ரசிகனுக்கு ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார். படம் ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து, இறுதியில் விறுவிறுப்பாக சென்று முடிகிறது. டைட்டில் கார்டு போடும்போது வரும் அனிமேஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவில் நிறைய காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாகியிருப்பதாலும், ரசிகர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கதைக்கு தேவையான ஒளியமைப்பை வைத்து கைதட்டல் பெறுகிறார். விறுவிறுப்பான திரைக்கதைக்கு இவருடைய கேமராவும் அழகாக கைகொடுத்திருக்கிறது.

ஜாவித் ரியாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். டைட்டில் கார்டில் அனிமேஷனோடு வரும் பாடல் சிறப்பு. மற்றபடி, பிற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. பிலோமின் ராஜின் எடிட்டிங், கதையின் விறுவிறுப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல் இருக்கிறது.

மொத்தத்தில் மாநகரம் வாழவைக்கும் Rank 4.5/5

Leave a Reply