ராஜேஷ் இயக்கதில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்திகேயன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது
ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது!
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.
ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவ...