சத்ரியன் இது யதார்த்தமான கேங்ஸ்டர் கதை – எஸ்.ஆர்.பிரபாகரன் பேட்டி
சுந்தரபாண்டியன் மூலம் பிளாக்பஸ்டர் படம் தந்தவர். ஒரு சினிமா எடுக்கிறோம் என்பதை தாண்டி நம் மக்களின் வாழ்வியலை இயல்பாக பதிவு செய்யவேண்டும் என ஆசைப்படுவார். அவரது அடுத்த படமான சத்ரியன், விகரம்பிரபு, மஞ்சிமாமோகன் உட்பட பல விஷயங்கள் மனம்விட்டு பேசியதில் இருந்து
ட்ரெய்லரை பார்த்தாலே கதைக்கு ரொம்ப மெனக்கெட்டது தெரியுதே?
ஆல்ரெடி நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கு உதயம்,அமரன் போன்ற நிறைய கேங்ஸ்டர் படங்கள் இங்கு பதிவாகியிருக்கு, ஆனா இந்த படங்கள் ஒரு சினிமாவாதான் காட்சிபடுத்திருப்பாங்க அமரன்ல கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை பதிவு பண்ண முயற்ச்சி பண்ணினாங்க, நான் ஒரு கேங்ஸ்டரை சினிமாவா இல்லாம, அவங்களுக்கு நெருக்கமா நின்னு ஒரு வாழ்க்கையா அழுத்தமா பதிவு பண்ணிருக்கேன். இந்த சத்ரியன் படத்துல சினிமாதனமான கேங்ஸ்டர எந்த பிரேம்லயும் பாக்கமாட்டீங்க. ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையில என்னென்ன நடக்கும் அத எப்பிடி எதிர் க...