Tuesday, February 11
Shadow

வைரமுத்து எனக்கு எதிரி தான் கவிஞர் சினேகன் சத்திரியன் பட இசை வெளியீட்டில் ஆவேசம்

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு. மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் சத்ரியன்.

யுவன் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படத்தின் பாடல் ஆசிரியர் சினேகன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

தமிழ் சினிமாவில் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். கிட்டதட்ட எல்லாருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார் வைரமுத்து.

ஆனால் என்னுடன் அவர் இதுவரை இணைந்து பணிபுரியவில்லை. அதை அவரே தவிர்த்து வருகிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. காரணம் அவரால நான் சினிமாவுக்கு வந்தவன் எனக்கு பாடல்கள் எழுத கத்து கொடுத்தவர் அப்படி இருக்கையில் ஏன் என்னை அவர் ஒதுக்க வேண்டும். அப்ப அவர் என்னை எதிரியாக பார்கிறார நானும் அவரும் ஒரே படத்தில் எழுத வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது ஒரே மேடையிலும் அவரை விரைவில் சந்திப்பேன்.

அவர் எனக்கு ஒரு வகையில் எதிரியாக தென்பட்டாலும், அவர்தான் எனக்கு ஆசான்.” என்று பரபரப்பாக பேசினார் சினேகன்.

Leave a Reply