
உலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் !
உலகில் உலகமயமாக்கல் ,முன்னேற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப் போல நடத்தும் மிகக் கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959 - லேயே பல நாடுகள் தடை செய்து விட்டன. இருந்தும் சில நாடுகளில் தொடரவே செய்கின்றனர். மனநோய் மருத்துவமனையில் நுழைந்தால் நோய் சரியாகி மீண்டு வர முடியும். ஆனால் புகலிடம் , சரணாலயம் என்கிற பெயரில் நடக்கும் 'அசைலமி'ல் ஒரு முறை நுழைந்தால் வெளியே வர வே முடியாது. ராணுவம் கேள்வி கேட்டால் கூட பதில் தர மாட்டார்கள். அங்கு நுழையும் மனிதர்களைப் பிராணிகளைப் போல ஹைட்ரோதெரபி , மெக்கானிக்கல் ஸ்லாப் போன்று பல வித ஆராய்ச்சிக்குட்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். காஸ்மெடிக்ஸ் , பேர்னஸ்க்ரீம்கள் , பாடி ஸ்ப்ரே , அலங்காரப் பூச்சுகள் போன்றவை பற்றிய ஆராய்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ரசாயனம...