‘செய் செய்யாதே’ – திரை விமர்சனம்
‘செய் செய்யாதே’: சமூக விழிப்புணர்வா, விளம்பர முழக்கமா?
மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு, சமூகப் பொறுப்பு என பல கனமான கருத்துகளை ஒரே திரைப்படத்தில் சொல்லப் போவதாக அறிவித்துள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படம், வரும் அக்டோபர் 30 முதல் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு திரைப்படம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறது என்று அறிவிப்பதால் மட்டும் அது சமூகப் பொறுப்புள்ள படைப்பாக மாறிவிடுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது.
போதைப்பொருள் பழக்கம், மருத்துவத் துறையின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகள், மனித உயிரின் மதிப்பு, தனிமனித ஒழுக்கம் என சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளை இப்படம் பேசுவதாகக் கூறப்படுகிறது. இத்தனை விஷயங்களையும் ஒரே கதையில் அடக்க முயல்வது பாராட்டத்தக்க முயற்சியா, அல்லது எல்லாவற்றையும்...
