காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’!
காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’!
‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு – சித் ஸ்ரீராமின் குரலில் காதல் பிரிவின் ஏக்கம்
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலின் இனிமையான தருணங்களை மட்டுமல்லாமல், காதலுக்குள் மறைந்திருக்கும் வலி, பிரிவு, ஏக்கம், காதலியின் மீதான பெருமை என உணர்வுகளின் மற்றொரு பரிமாணத்தைப் பதிவு செய்யும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். இளம் தலைமுறையினரின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் முதல் சிங்கிளான “ஆசை வரமே” ஏற்கனவே காதலின் நெருக்கமான தருணங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த...
