சிம்புவுடன் ஜோடி சேரும் கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவில் கொஞ்சம் மந்தமாக இருந்த சிம்பு மீண்டும் ராஜாவாக கலம் இறங்க ஆயத்தமாகிவிட்டார் ஆம் தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்க்கிறார் .
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தையடுத்து ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. அதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷி கண்ணா போன்ற நடிகைகள் முயற்சி எடுத்து வந்தனர். அதனால் அவர்களில் இருவரில் ஒருவர் தான் நடிப்பார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால் இப்போது மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் கமிட்டாகியிருக்கிறார். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து விட்டு மலையாளத்தில் தனது தந்தை பிரியதர்ஷன் இயக்கி வரும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் பி.எஸ்.மித்ரன் இய...