
சிம்புவின் அதிரடி மாற்றம் ஆச்சிரியத்தில் கோலிவுட்
சிம்புவின் பெயரை சொன்னால் இயக்குனர்களுக்கு பி.பி. ஏறும். அந்த அளவுக்கு இயக்குனர்களை படாதபாடு படுத்தினார். அதிலும் ஒரு இயக்குனரை கதறவிட்டார். இப்படி சேட்டை செய்த அந்த நடிகர் தற்போது அநியாயத்திற்கு மாறிவிட்டார்.
இளம் இயக்குனரை கதற விட்ட பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் அவர் வந்ததாக சரித்திரமே இல்லை என்று குற்றம் சாட்டியவர்களையே வாயடைத்துப் போக வைத்துவிட்டார். காதலை வித்தியாசமாக காட்டும் இயக்குனரின் படப்படிப்புக்கு சொன்ன நேரத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தார். மேலும் எந்த பிரச்சனையும் செய்யாமல் டப்பிங்கும் பேசினார்.
முன்பெல்லாம் நடிகர் வந்தாலே அந்த இடத்தில் பிரச்சனை என்ற நிலை மாறிவிட்டது. தற்போது எல்லாம் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். யாரிடமும் பிரச்சனை செய்வது இல்லை. திமிர்த்தனமாக நடப்பது இல்லை. எந்த கிசுகிசுவிலும் சிக்கு...