
த்ரிஷாவுக்கு வக்காலத்து வாங்கும் சிம்பு
பீட்டா ஜல்லிக்கட்டை எதிர்க்கும் என்று தெரிந்திருந்தால் த்ரிஷா அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கவே மாட்டார் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
காதலிக்கிற பெண்ணை கூட விட்டுக் கொடுப்பேன் ஆனால் உயிருக்கு உயிரான நண்பனை எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் என சிம்பு தனது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட டீஸரில் தெரிவித்திருப்பார்.
அதை அவர் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிறார். த்ரிஷாவும், சிம்புவும் நல்ல நண்பர்கள். இதை த்ரிஷா பலமுறை தெரிவித்துள்ளார். அதை சிம்பு தற்போது நிரூபித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் த்ரிஷாவின் பீட்டா ஆதரவு பற்றி கேட்டதற்கு சிம்பு கூறுகையில்,
த்ரிஷா தெருநாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து பராமரிக்கிறார். அவரின் அந்த நல்லகாரியம் பற்றி யாரும் பாராட்டுவது இல்லை. அப்படி இருக்கும்போது இது குறித்து மட்டும் எப்படி கேட்க முடியும்.
பீட்டா ஜல்லிக்கட்டை எதிர்க்கும் என்று அவருக்க...