Tag: #sindhubhad #vijaysethupathy #anjali #arunkumar #suryasethupathy #yuvanshankarraja
S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”.
பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குனர் S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”.
இயக்குனர் S.U.அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை தயாரித்த K புரொடக்சன்ஸ் S.N. ராஜராஜன் அவர்களும் சேதுபதி திரைப்படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் அவர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமையான கதா...

