
நிதின் சத்யா – பவர்ஸ்டார் – V.R.விநாயக் கூட்டணியில் உருவாகும் ‘சிரிக்க விடலாமா’..!
சிரிக்க விடலாமா’ ; உத்தரவு கேட்கும் பவர்ஸ்டார்..!
‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.
...