தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு; ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்த சேரன் – வி.சி. குகநாதன் வாழ்த்து
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு; ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்த சேரன் – வி.சி. குகநாதன் வாழ்த்து
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (ஜூலை 23) காலை, சங்க அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.
நிகழ்வில் மூத்த திரைப்பட எழுத்தாளரும், சங்கத்தின் முன்னாள் தலைவர் வேட்பாளருமான வி.சி. குகநாதன் தலைமையேற்று, புதிய நிர்வாகிகளுக்கு உறுதிமொழி எடுத்துக்கொடுத்து, தேர்வுச் சான்றிதழ்களை வழங்கினார். தேர்தல் அதிகாரி உமாசங்கர் பாபு முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய தலைவராக இயக்குநர் சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் பொறுப்பேற்றதுடன், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்புக்குப் பி...
