மீண்டும் சுசி லீக்ஸா: நடிகைகள் கலக்கம்
திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.
தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.
பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுசித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.
சுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்புடன் ...
