சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
“சினிமா கன்னடம், தமிழ், தெலுங்கு என பிரிந்தது அல்ல; அது இந்திய சினிமா” – யாஷ்
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஆக்ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 26-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் ரசிகர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ச...
