Friday, February 13
Shadow

Tag: #sulthan #karthi #bhakiyarajkannan

கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படம் வரலாற்று திப்பு சுல்தான் கதை இல்லை

கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படம் வரலாற்று திப்பு சுல்தான் கதை இல்லை

Latest News, Top Highlights
  டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரு.கார்த்தி அவர்கள் நடிக்க திரு.பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எங்களின் சுல்தான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த திரைப்படம் திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்டதாக எடுக்கப்படுவதாகவும் அதனை திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்க கூடாதெனவும் கூறி ஒரு அமைப்பினர் 24.09.19 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் எற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்திற்குரிய விசயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர...