Monday, October 19
Shadow

Tag: supernatural thriller Tamil movie

“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

Latest News, Top Highlights
"ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!" – 'தி டார்க் ஹெவன்' விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு   சென்னை: "ஒரு திரைப்படம் உருவாகுவது வெறும் படப்பிடிப்பு அல்ல; அது ஒரு போராட்டம்" என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திய நிகழ்வாக அமைந்தது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா. கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்த மர்ம கிரைம் திரில்லர், நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய அம்சங்களை நவீன விசாரணை கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "ஒரே மாதிரியாக நடைபெறும் ஐந்து கொலைகள்... ஆனால் எந்தத் தடயமும் இல்லை" என்ற சுவாரஸ்யமான கருவை மையமாகக் கொண்ட இப்படம், ஜூலை 17ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளிய...
டார்க் ஜியண்ட் – திரை விமர்சனம் Rank 2.75/5

டார்க் ஜியண்ட் – திரை விமர்சனம் Rank 2.75/5

Latest News, Review
டார்க் ஜியண்ட் - திரை விமர்சனம் திகில் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘டார்க் ஜியண்ட்’. மர்மம், அமானுஷ்யம், குடும்ப பின்னணி மற்றும் திகில் அம்சங்களை இணைத்து, பார்வையாளர்களை அச்சத்துடனும் ஆர்வத்துடனும் பயணிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.கிஷான். கடன் சுமையால் வாழ்க்கையில் திணறும் ஆதர்ஷ் மதிகாந்துக்கு ஒரு நாள் எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வருகிறது. கோவை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாத்தா உயிருடன் இருப்பதாகவும், தனது சொத்துக்களை பேரன் மற்றும் பேத்திக்கு வழங்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதை தனது பிரச்சனைகளுக்கான தீர்வாகக் கருதும் ஆதர்ஷ், மனைவி மற்றும் தங்கையுடன் அந்த கிராமத்துக்குச் செல்கிறார். அங்கு படுக்கையிலேயே இருக்கும் தாத்தாவுடன் சில நாட்கள் தங்க முடிவு செய்ய...