மாவீரன் கிட்டு படத்தில் நடிக்க சில ஹீரோக்கள் மறுத்தனர்
விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாவீரன் கிட்டு’. இந்தப் படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது: இது 1980களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்படுகின்ற ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்னைதான் படம். இந்தக் கதையை 3 வருடங்களுக்கு முன்பே படமாக்க நினைத்திருந்தேன். அப்போது பார்த்திபனிடமும் கதையைச் சொன்னேன். ‘இதில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’ என்றார் அவர்.
இந்தப் படத்தில் பார்த்திபன் கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது என்று, சில ஹீரோக்கள் நடிக்கத் தயங்கினார்கள். அவரது கேரக்டரின் தன்மையைக் குறைக்கச் சொன்னதும், நான் மறுத்தேன். பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் படத்தை இயக்கி முடித்தேன். விஷ்ணு கிட்டு என்ற கேரக்டரிலும், பார்த்திபன் சின்னராசு என்ற வேடத்திலும், ஸ்ரீதிவ்யா கோமதி என்ற கேரக்டரிலும் நடித்தி...
