Sunday, October 25
Shadow

பிரபுதேவா – சிம்ரன் ஜோடிக்கு ‘கமல் ஸ்ரீதேவி’… மீண்டும் காதல் கதையுடன் களமிறங்கும் MRP Entertainment!

பிரபுதேவா – சிம்ரன் ஜோடிக்கு ‘கமல் ஸ்ரீதேவி’… மீண்டும் காதல் கதையுடன் களமிறங்கும் MRP Entertainment!

தமிழ் சினிமாவில் நடனத்தாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் பிரபுதேவா, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சிம்ரனுடன் இணைந்து புதிய காதல் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த், பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் ஆகியோருடன் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் கதையை மையமாகக் கொண்டு, குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையில் படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சரண் வேலாயுதன் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

மேலும், அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகவும், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படங்களையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களையும் கவனிக்கின்றனர். R.J. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார்.

விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா மேற்கொள்ள, ஒலி வடிவமைப்புப் பணிகளை சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் கவனிக்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ். E இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் செயல் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளனர்.

‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான MRP Entertainment, ஏற்கெனவே ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ படத்தைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கதைக்களம், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த தகவல்களைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பிரபுதேவா – சிம்ரன் கூட்டணி திரையில் எந்த மாதிரியான காதல் அனுபவத்தை வழங்கப்போகிறது என்பதே இப்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பு.

 

Prabhu Deva and Simran Team Up for New Romantic Film ‘Kamal Sridevi’

Tamil cinema stars Prabhu Deva and Simran are set to share the screen in a new romantic film titled ‘Kamal Sridevi’. The film’s title has been officially announced, raising expectations among moviegoers eager to see the popular actors together in a fresh romantic outing.

Presented by Zion Films, represented by Soundarya Rajinikanth, in association with MRP Entertainment, the film is produced by Basilian Nazareth and Mahesh Raj Basilian. Mithun Jai Shankar, Smeka and several others are also part of the cast.

Positioned as a distinctive love story for audiences to enjoy with their families, ‘Kamal Sridevi’ aims to offer a refreshing take on romance. The film was shot in a single schedule across Munnar and Chennai, and the team is currently engaged in the final stages of production.

Written and directed by Krishnanand Kottarappattu, the film features music composed by G. V. Prakash Kumar, with Charan Velayudhan handling cinematography and Raja Arumugam overseeing editing. Rajeevan is responsible for production design, while Sekar takes care of the art direction.

The technical crew also includes costume designers Anu Vardhan and Nava Rajkumar, with Mahesh Mathew choreographing the action sequences. Camera Senthil is handling promotional photography, while Maniyan is responsible for still photography on the sets. R. J. Suresh Kumar serves as production manager.

Gopi Prasanna is in charge of publicity design, while Suren G and Azhagiyakoothan handle sound design. Sivakanth serves as chief associate director, with Dinesh E working as associate director. Yuvraj is handling publicity and public relations. Prashanth serves as executive producer, while Sarath J. Samuel is the co-producer.

MRP Entertainment has established a presence in Tamil cinema with films such as ‘Good Night’, ‘Lover’, ‘Tourist Family’ and ‘With Love’. Following the success of ‘With Love’, which was presented by Zion Films and MRP Entertainment, the two banners have reunited for ‘Kamal Sridevi’.

With the title now unveiled, audiences are looking forward to further updates about the film, including details about its storyline and release date. The reunion of Prabhu Deva and Simran is expected to be one of the key attractions, with viewers eager to see the chemistry the duo brings to this new romantic venture.