நடிகர் எஸ். வி. ரங்கராவ் மறைந்த தினம் பதிவு
ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
பாதாளபைரவி, கல்யாணம் பண்ணிப்பார், சண்டிராணி, வேலைக்காரி மகள், ரோஹிணி, தேவதாஸ், ராஜி என் கண்மணி, துளி விசம், குணசுந்தரி, மிஸ்ஸியம்மா, மாதர் குல மாணிக்கம், அலாவுதீனும் அற்புத விளக்கும், சௌபாக்கியவதி, அன்னையின் ஆணை, கடன் வா...
