அருள்வான் – திரை விமர்சனம். (Rank 2.5/5)
அருள்வான். - திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியாகும் படங்கள் அவ்வப்போது கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் பழங்குடியின மக்களின் கல்வி, அவர்களின் வாழ்க்கை முறை, அரசு திட்டங்கள் எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளன என்ற கேள்விகளை முன்வைத்து வந்திருக்கும் படம் 'அருள்வான்'.
கதையின் மையத்தில் இருப்பது குறிஞ்சி என்ற பழங்குடியினச் சிறுமி. படிக்க வேண்டும் என்ற தீவிர ஆசை இருந்தும், வறுமை, சமூக சூழல், அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் அவளது கல்விப் பயணம் தொடர்ந்து தடைகளைச் சந்திக்கிறது. அந்தப் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியராக வரும் முத்துவேல் (அருள்நிதி) எப்படி துணை நிற்கிறார் என்பதே படத்தின் கரு.
அருள்நிதி வழக்கம்போல் அடக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகன் என்ற பிம்பத்தை விட, கதையின் தேவைக்கேற்ப அமைதியாக பயணிப்பது அவரது பலம். ஆனால் அவரது கதாபாத்த...
