
டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் பிரபாஸின் ‘ஃபௌஜி’… புதிய போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது!
சென்னை:
பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி (Fauzi)’ திரைப்படம் வரும் டிசம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணியிலான ஆக்சன் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், இதுவரை எந்த படத்திலும் காணாத வித்தியாசமான தோற்றத்தில் பிரபாஸ் இடம்பெற்றுள்ளார். போர்க்களத்தில் கடுமையான மோதலுக்குப் பிறகு ரத்தக்கறை படிந்த உடல், நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி, வெள்ளை வேட்டியில் அமர்ந்திருக்கும் அவரது தோற்றம், போரின் கொடுமையையும் ஒரு வீரனின் மனவலிமையையும் ஒரே காட்சியில் உணர்த்துகிறது.
தலைகுனிந்து கையில் துப்பாக்கியை பிடித்தபடி அமைதியாக அமர்ந்திருக்கும் பிரபாஸைச் சுற்றி போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சி, படத்தின் உணர்ச்சி மற்றும் காட்சிப் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துகிறது. படக்குழுவின் தகவலின்படி, இந்த போஸ்டர் திரைப்படத்தின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிகளில் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண போர் திரைப்படமாக இல்லாமல், அதிரடி, உணர்ச்சி மற்றும் வலுவான கதைக்களம் இணைந்த திரைப்பட அனுபவமாக ‘ஃபௌஜி’ இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது. இதனால், படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடித்துள்ளார். மேலும் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் கவனித்துள்ளதுடன், படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொண்டுள்ளார். விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை ஆர்.சி. கமலா கண்ணன் தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது.
வெளியீட்டு தேதி உறுதியான நிலையில், பிரபாஸின் புதிய தோற்றமும், படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், ‘ஃபௌஜி’ 2026 ஆம் ஆண்டின் முக்கியமான திரையரங்கு அனுபவங்களில் ஒன்றாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Rebel Star Prabhas’ Fauzi Set for Worldwide Release on December 3; Powerful New Poster Raises Expectations
Chennai:
The makers of the highly anticipated pan-India film Fauzi, starring Rebel Star Prabhas, have officially announced that the film will hit theatres worldwide on December 3, 2026. Along with the release date announcement, the team unveiled a striking new poster that has quickly gone viral across social media, significantly boosting excitement for the film.
Directed by acclaimed filmmaker Hanu Raghavapudi, Fauzi is a grand period action drama produced by Mythri Movie Makers and presented by T-Series. The film is jointly produced by Naveen Yerneni, Y. Ravi Shankar, and Bhushan Kumar.
The newly released poster showcases Prabhas in a never-seen-before rugged avatar. Covered in blood, scarred from battle, and seated silently on a war-ravaged battlefield, the actor portrays a battle-weary warrior whose expression reflects sacrifice, pain, resilience, and determination.
With long unkempt hair, a thick beard, a blood-stained white dhoti, and a rifle firmly in his hands, Prabhas delivers a powerful visual without uttering a single word. The battlefield, filled with fallen soldiers and enveloped in smoke, hints at the film’s intense emotional depth and epic cinematic scale.
According to the makers, the poster is taken from one of the film’s biggest action sequences, promising audiences spectacular combat scenes combined with an emotionally engaging narrative. The visuals suggest that Fauzi will offer much more than a conventional war drama, blending large-scale action with compelling storytelling.
The release date announcement has further heightened anticipation for the project. With every promotional asset receiving an overwhelming response, the film is already being regarded as one of the biggest pan-India releases of 2026.
Imanvi stars opposite Prabhas, while veteran actors Anupam Kher, Mithun Chakraborty, Jaya Prada, and Bhanu Chandar play pivotal roles.
The film features cinematography by Sudeep Chatterjee, music composed by Vishal Chandrasekhar, production design by Anil Vilas Jadhav, editing by Kotagiri Venkateswara Rao, and VFX by R.C. Kamala Kannan.
With its official release date now confirmed and Prabhas’ remarkable transformation drawing widespread attention, Fauzi is shaping up to be one of the year’s biggest cinematic spectacles, promising an unforgettable theatrical experience for audiences worldwide.
