‘தீராகணம்’ மூலம் கவனம் ஈர்க்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் – முதல் பாடலை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்!
‘தீராகணம்’ மூலம் கவனம் ஈர்க்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் – முதல் பாடலை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான மித்துன் மாணிக்கம் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஃபேமிலி பாய்’ (Family Boy). குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ தற்போது வெளியாகி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலையும் அதன் லிரிக்கல் வீடியோவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
காதல் உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘தீராகணம்’ பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆதித்யா RK, மால்வி சுந்தரேசன், அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து இப்பாடலை...



