ஒரே இரவில் அரங்கேறும் காதல், குற்றம், அதிரடி ஆட்டம்… ‘STATION – Hunt For Survival’!
ஒரே இரவில் அரங்கேறும் காதல், குற்றம், அதிரடி ஆட்டம்… ‘STATION – Hunt For Survival’!
அஜய் கார்த்தி – தீபா பாலு இணையும் புதிய திரைப்படம்… சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகும் திரில்லர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், காதல், குற்றம், சஸ்பென்ஸ், அதிரடி எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒரே இரவின் பின்னணியில் இணைத்து உருவாகி வருகிறது ‘STATION – Hunt For Survival’ திரைப்படம்.
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அஜய் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தீபா பாலு கதாநாயகியாக இணைந்துள்ளார். இருவரும் முதன்முறையாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஒரு இ...

