
விஜய் 62 பூஜைக்கு நடுவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. 2 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஹேப்பி தீபாவளி என்று குறிப்பிட்டு படத்தின் ரிலீஸை உறுதி செய்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள...