ஐஃபா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’பிச்சைக்காரன்’ பாட்டு
கடந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் பட்டியலில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் அடங்கும் வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை படம் என்றும் சொல்லலாம் அதோடு இந்த படத்தின் பாடல்களும் மிக பெரிய வெற்றியை பெற்றது அதில் குறிப்பாக 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்:
நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி)
இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II)
தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா),
நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர...