Monday, May 25
Shadow

Tag: #theethumnandre

நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..!

நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..!

Latest News, Top Highlights
N H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் 'தீதும் நன்றும்'. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் 'தீதும் நன்றும்' என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்...