ஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’..!
லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் 'திசை'. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வரதராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்..
படத்தின் இயக்குனர் வரதராஜன் கூறும்போது, "இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி இந்த ஆர்கானிக் உ...

