தோழமை108-துவக்க விழா
’’தோழமை 108’’ குழு தமிழ்நாடு முழுவது உருவாக்கப்பட உள்ளதாக பிரபுதாஸ் அவர்கள் தெரிவித்தார்.மேலும் அவர் கூறும் போது ’’விபத்தில்லா தமிழகம்,தற்கொலை இல்லா தமிழகம் ‘’உருவாக்க 108 டுடன் 104 உதவி மையமும் இணைந்து பாடுபடுகிறது.அத்தகைய முயற்சியில் இன்று பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,நமது தோள்கள் அறக்கட்டளை, தோழமை 108 –மூலம் கைகோர்க்கும் போது இன்னும் மக்களுக்கான சேவையை சிறப்பாக ஆற்ற முடியும் என்றார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் திரு அன்புச்செல்வன் அவர்கள் பேசும் போது முதன் முதலாக பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தோழமை 108 –ஆம்புலன்ஸ், நமது தோள்கள் அறக்கட்டளை இணைந்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.மேலும் அவர் கூறும் போது ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள்.இப்படியான சார்புத் தன்மையில் தான் சமுகத்திற்கான நல் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்றார்.நெடுஞ்சாலைகளில் விபத்துக்க...
