காதல் கலந்த நகைச்சுவை கலந்த டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்
திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி. குமார் தயாரிக்கும் புதிய படம் "டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்". இது முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் கலையரசன், 'கயல். ஆனந்தி, காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, 'ஜாங்கிரி' மதுமிதா, ராகவ் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எம், ஜானகிராமன் இயக்கியுள்ளார்.
'தெகிடி', 'சேதுபதி' புகழ் நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக ராம் பிரசாத்தும், எடிட்டராக ராதாகிருஷ்ணன் தனபாலும் அறிமுகமாகியுள்ளனர்.
இந்த படம் பற்றி படக்குழுவினர் கூறுகையில், "இப்படம் முழுநீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், நிச்சயம் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தின் பல இடங்களில் தங்கள் வா...
