உள்குத்து – திரைவிமர்சனம் (அதிரடி ஆனந்தம்) Rank 3.5/5
கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் மற்றும் நந்திதா பாலசரவணன் திலிப் சுப்புராயன் ,ஜான் விஜய், சரத் லோகித், சாயாசிங் மற்றும் பலர் நடிப்பில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் உள்குத்து படம் உருவாகியுள்ளது .
முதல் படத்தில் வெற்றிக்கனியை பறித்த இயக்குனர் கார்த்திக் ராஜு இந்த படத்திலும் அதை தக்க வைத்து கொண்டார் என்று தான் சொல்லணும் காரணம் மிக சிறந்த திரைக்கதை தான் முக்கிய காரணம் படத்துக்கு காதல் ஆக்ஷ்ன் செண்டிமெண்ட் சிறந்த இசை முக்கியமாக சிறந்த கதாபாத்திரங்கள் நட்சத்திர தேர்வு என எதிலும் குறை வைக்காமல் மிகவும் நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்துள்ளார்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஓட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது படத்துக்கு மிக முக்கிய பலம் என்று தான் சொல்லணும் அதே போல இயக்குனரின் என்னத்துக்கும் கதைக்கும் என்ன தேவை என்று படத்தில் பணிபுரிந்த அனைவ்ரும் உணர்ந்து செய்துள்ளனர் குறிப்பாக ...


