‘வல்லதேசம்’ – திரைவிமர்சனம்
லக்ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பவர் டூல்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் என்.டி.நந்தா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வல்லதேசம்’ முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்ட படமாகும்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரான அனு ஹாசனின் கணவருக்கு லண்டனில் வேலை கிடைக்க, குடும்பத்தோடு லண்டன் வருகிறார்கள். லண்டனுக்கு வரும் அனு ஹாசனின் குடும்பத்தை சர்வதேச ஆயுதம் கடத்தல் டான் ஆன, டேவிட் யுவராஜனின் ஆட்கள் நோட்டமிடுகிறார்கள்.
திடீரென்று அனு ஹாசனின் கணவரை கடத்தும் டேவிட் ஆட்கள், அவர் இந்திய ராணுவத்தின் உளவாளி என்பதை கண்டுபிடிப்பதோடு, அவரை கொலை செய்துவிடுகிறார்கள். இந்த சம்பவத்தின் போது துப்பாக்கி காயத்துடன் அனு ஹாசன் உயிர் பிழைக்க, அவரது மகள் கடத்தப்பட்டு விடுகிறாள்.
சிகிச்சைக்குப் பிறகு தனது மகளை தேடும் முயற்சியில் இறங்கும் அனு ஹாசன், லண்டனில் உள்ள சில சமூக விரோதிகளையும் வேட்...
