உழைக்கும் வர்க்கத்தை பற்றிய ஒரு படம் தான் இந்த வேலைக்காரன். – மதன் கார்க்கி.
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் தான். உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் தங்கக் காசு கொடுத்த இந்த உள்ளத்துக்கு நன்றி. மொழிமாற்று படம் தான் எடுப்பார் ராஜா என பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படத்தை கொடுத்து மிரட்டியவர் ராஜா. ராஜாவும், ராஜாவும் சேர்ந்து மக்கள் செல்வனாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு உன்னத படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்...
