“முருக பக்தியில் இசை பயணம் தொடங்கிய சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்… ‘வேலும் மயிலும்’ மூலம் புதிய முயற்சி!”
“முருக பக்தியில் இசை பயணம் தொடங்கிய சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்... ‘வேலும் மயிலும்’ மூலம் புதிய முயற்சி!”
தமிழ் சினிமாவில் தரமான கதைகள் மற்றும் புதிய திறமைகளை தொடர்ந்து ஆதரித்து வரும் தலைமையிலான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தற்போது சினிமாவைத் தாண்டி சுயாதீன இசை உலகிலும் புதிய அடியை பதித்துள்ளது. அந்த வரிசையில், நிறுவனத்தின் முதல் ஆன்மீக சுயாதீன இசைப் பாடலாக ‘வேலும் மயிலும்’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
முருகப் பெருமானின் ஆன்மீக மகத்துவத்தையும், தமிழர் பண்பாட்டு மரபையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், பக்தி இசைக்கு ஒரு புதிய நவீன வடிவத்தை வழங்குகிறது. வழக்கமான பக்திப் பாடல்களின் பாதையைத் தாண்டி, நாட்டுப்புற இசை நுணுக்கங்களும் சமகால இசை கலப்பும் இணைந்திருப்பது இந்தப் பாடலின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பாடலுக்கு இசையமைத்து பாடியிருப்பவர் ...
