குடி போதையில் கன்னட நடிகரை தாக்கிய விமல்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், மது போதையில் நடிகர் ஒருவரை கடுமையாக தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த புதுமுக நடிகர் அபிஷேக் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த அபிஷேக்கை, நடிகர் விமல் மற்றும் அ4 பேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.
இதில், நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அபிஷேக், இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் எ...
