விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி படத்தின் டைட்டில் இணையதளத்தில் கசிந்தது
தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த நிலையில் விஜய்-முருகதாஸ் படம் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது, அடுத்து சமுதாயத்தில் நடக்கும் எந்த பிரச்சனையை இப்படம் பேசும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போது விஜய் 62 படத்தின் தலைப்பு இது தான் என்று ஒரு டைட்டில் இணையத்தை சுற்றி வருகின்றது, இவை உண்மையா என்று கூட தெரியவில்லை.
விவாசாயிகள் பயன்படுத்தும் 'கலப்பை' என்பது தான் விஜய் 62 டைட்டில் என்று ஒரு செய்தி தீயாய் பரவி வருகின்றது, எது எப்படியோ முருகதாஸ் சொன்னாலே உண்மை வெளிவரும்....
