சேது படத்தை நினைத்து நினைத்து தினம் தினம் வருத்தப்படுவேன் விக்னேஷ்
தமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா பாலுமகேந்திரா வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்....
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்...
ஏன் இந்த வில்லன் வேஷம் என்று கேட்டோம்...
எனக்கு சினிமா மோகம் அதிகம்...24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான்...
பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.
சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார்..கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கின...

