“என்னை மிஞ்சிட்ட” என்று ராதாரவி சார் பாராட்டியது எனக்கு பெரிய மகிழ்ச்சி – வினோத் சாகர்
ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்பவர்கள் கதாநாயகன், கதாநாயகி மற்றும் வில்லன். இவர்களையும் தாண்டி ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அப்படி சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் வினோத் சாகர்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’. சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் இன்பராஜ் என்கிற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் வினோத் சாகர். படம் பார்ப்பவர்களை பாதிக்க வைப்பதே ஒரு கதாப்பாத்திரத்தின் ஈர்ப்பு என்று சொல்லலாம். அப்படி பார்வையாலயே மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்த வினோத் சாகரின் கதாப்பாத்திரம் பார்ப்பவர்களையும் கோபப்படவும், பாராட்டவும் வைத்தது. இதுதான் ஒரு நடிகருக்கு ரசிகர்கள் தரும் சிறந்த அங்கிகாரம். இந்த கதாப்பாத்திரம் கொடுத்த அடையாளம் தான் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படப்பிட...
